Saturday, 14 March 2015

high speed internet...for system and loptops

அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை
 (how to increase internet speed)




  •    இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

  •   இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.


  •     சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

உங்கள் கம்ப்யூட்டர் வேலை செய்யும் வேகத்தை அதிகரிக்க...(How to speed up computer)










உங்கள் கம்ப்யூட்டர் இணையம், விளையாட்டுகள், போன்றவற்றின் காரணமாக  வேலை செய்யும் திறன் குறைவாக இருக்கும். இதனை Refresh கொடுப்பதன் மூலம் சரி செய்ய முடியாது. இந்த குறைபாடுகளை சரிசெய்ய CCleaner என்ற மென்பொருள் பயன்படுகிறது.இந்த மென்பொருளை Download செய்தால் போதும்.இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...




●முதலில் இதனை DOWNLOAD செய்ய Click here.
●இதனை பதிவிறக்கம் செய்தவுடன் Install செய்யவும்.
●பிறகு Open செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Run Cleaner என்பதை கொடுக்கவும். 100% வந்தவுடன் Close செய்யலாம்.





●இதன் மூலம் நாம் இணையத்தில் சென்ற History, catch, cookies போன்றவை அழிக்கப்படுகின்றன.
●இந்த மென்பொருளானது Chrome, Internet explorer, Firefox போன்ற அனைத்து உலாவிகளின் cookies அழிப்பதோடு மட்டுமல்லாது தேவையற்ற கோப்புகளையும் அழிக்கிறது.
●இந்த மென்பொருள் இணையம் உபயோகிப்பவர் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்.
●உங்கள் கம்ப்யூட்டரை Shut down செய்யும் முன்பு இரு முறை Run cleaner கொடுக்கவும். இனிமேல் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.  



நன்றி ...நன்றி...நன்றி,,

விண்டோஸ் 7 ஐ விண்டோஸ் 8 ஆக மாற்ற எளிய முறை ..








விண்டோஸ் 8 வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலர் விண்டோஸ் 7 ஐ பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவவாறு பயன்படுதுவோர் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த விருப்பப்படுவது உண்டு. ஆனால் விண்டோஸ் 8 கிடைக்காமல் இருப்பதால் பயன்படுத்த முடியாது. இதனை தீர்க்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது. 
இதன் மூலமாக முழுவதும் 7 ஐ 8 ஆக மாற்ற முடியாது. இருந்தாலும் 8 ல் இருப்பதைப் போன்று அமைப்புகள் தோன்றும்.




செய்முறைகள்:


●முதலில்  WINDOWS 8 UX PACK 5.0 என்ற மென்பொருளைDownload செய்யவும்.
●பிறகு இரு முறை Click செய்யவும்.
● theme ஐ தேர்ந்தெடுத்து விட்டு வெளியேறவும்
● பிறகு உங்கள் கம்ப்யூட்டரை Reboot செய்யவும் 
● இப்பொழுது விண்டோஸ் 8 Theme தோன்றும்



நன்றி ......நன்றி.......நன்றி

மென்பொருள்களை பாதுகாக்க Password கொடுப்பது எப்படி?





உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...


செய்முறைகள்:
● முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ள Click here


●இந்த மென்பொருளை Download செய்த பிறகு Install கொடுத்தவுடன் Next என்பதை தேர்வு செய்யவும்.

● பிறகு Enter Admin Password என்ற கட்டத்தில் உங்களது Password ஐ உள்ளிடவும்

●பிறகு Confirm Admin Password என்ற கட்டத்தில் மீண்டும் Password ஐ உள்ளிட்டு Install செய்யவும். \

● பிறகு உங்கள் மெனுவில் இந்த Password Door ஐ தெர்வு செய்து Password 
கொடுத்து OK அழுத்தவும்.

● பிறகு Protect a Program என்பதில் அழுத்தவும்.

●இப்பொழுது நீங்கள் Install செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் பெயர்களும் தோன்றும் .

● நீங்கள் Lock செய்ய விரும்பும் மென்பொருளை தேர்ந்தெடுத்து கீழெ உள்ள Protect என்பதை தெர்வு செய்யவும்.

● பிறகு உங்களது மென்பொருள் பெயர் தோன்றியவுடன் OK கொடுக்கவும்.

● இதேபோல் விடுவிக்க Password Door ல் சென்று விடுவிக்க வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Remove என்பதை அழுத்தவும்


நன்றி.....நன்றி....நன்றி.....

Friday, 13 March 2015

ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி




enjoy the gmail user












          வளரும் கலியுகத்தில் அனைத்தும் எளியனவாக மாறி வருகிறது . அந்த வகையில் Gmail இப்பொழுது இன்னும் ஒரு புது வசதியை கொடுத்துள்ளது. இதற்கு முன் நீங்கள் ஒரு புகைப்படத்தை உங்கள் மின்னஞ்சலில் இணைக்க அதை பதிவேற்றம் ( upload ) செய்ய வேண்டி இருக்கும். இப்பொழுது நீங்கள் பின் வரும் வழிமுறைகள் மூலம் எளிதாக புகைப்படத்தினை உட்புகுத்தலாம்.

குறிப்பு : இது தற்பொழுது google chrome ப்ரௌசரில் மட்டுமே சாத்தியமாகும்.


          நாம் எதவாது ஒரு பகுதியை ( எழுத்துக்கள் , புகைப்படம் ) தெரிவு (select ) செய்து அதை CTRL+ C பட்டனை அழுத்துவான் மூலம் copy எடுக்கிறோம் இதை நாம் கணினியில் மற்றும் ஒரு இடத்தில் CTRL + V தட்டச்சு செய்வதன் மூலம் உட்புகுத்துவோம் .இப்பொழுது இதே முறை கொண்டு ஒரு புகைப்படத்தின் மீது உங்கள் mouse ன் மூலம் வலது புற பட்டனை அழுத்தும் பொழுது copy image என்ற option உங்களுக்கு கிடைக்கும் இதைக் கொண்டு நீங்கள் gmail ல் இப்பொழுது பேஸ்ட் செய்தால் அந்த புகைப்படத்தை எளிதாக உட்புகுத்திவிடலாம்.
இந்த விவரத்தை மேலோட்டமாக படித்தால் உங்களுக்கு இது தேவை இல்லாத ஒன்றாக தோன்றும். அல்லது இந்த வசதி முன்பே இருப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மையில் இந்த புதிய வசதியின் சரியான நோக்கத்தை காண்போம்.


நீங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ ஒரு புகைப்படத்தை copy செய்து paste செய்யும் பொழுது தற்காலிகமாக அது உங்கள் திரையில் தெரியும் . ஆனால் உங்கள் நண்பருக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பினால் அவர்களுக்கு அது தெரியாது. ஒரு வேலை நீங்கள் copy  செய்தது இணையத்தின் வாயிலாக என்றால் . அந்த புகைப்படம் இணையத்தில் உள்ள வரை தெரியும். ஒரு வேலை அது அழிந்தால் மின்னஞ்சலில் உள்ள புகைப்படமும் காணாமல் பொய் விடும் .


இதை தடுக்கும் பொருட்டு இப்பொழுது gmail  ஆனது நீங்கள் paste செய்யும் புகைப்படத்தை தனது செர்வரில் பதிவு செய்துகொள்ளும். இது தான் இதன் பின் உள்ள தொழில்நுட்பமாகும்.
Note : this technique only works on google chrome browser



thank you .......

மிக எளிமையாக Paypal கணக்கு துவங்குவது எப்படி?



இது வரை இந்தியர்கள் Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.


இனிமேல் CreditCard  தேவையில்லை.  இந்தியர்கள் அதிகமாக Paypal பயன்படுத்துவதை உணர்ந்த அந்த நிறுவனம் புதிய கணக்குகளை துவங்குவதை எளிமையாக்கியுள்ளது.
இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் CLICK HERE
STEP 1: Signup Today எனும் லிங்கை க்லிக் செய்யவும்.
STEP 2:  “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link  அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified   இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.

Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name:  உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9:  Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.
அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
உங்களின் சந்தேகங்களை இங்கே கேட்கவும், நான் உங்களுக்கு பதில்களைத் 

VLC மீடியா பிளெயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்



vlc media player



          கணினி உபயோகிக்கும் அனைவரும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மட்டும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு காண்போம்.




1)Add Watermarks

குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.
அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools – Effects and Filters – Video Effects – Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.





2) Video Converter

நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க
Media – Open File – Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.








  • அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து  மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.







பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.


3)Free Online Radio:

VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.  இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.










The enjoy vlc media player



கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு





    உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தகூடிய இயங்குதளம் windows இயங்குதளம் தான். அந்த நிறுவனம் இப்பொழுது தனது புதிய பதிப்பான windows 8ன் சோதனைப்  பதிப்பை வெளியிட்டது.


இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7ல் problem recorder என்ற ஒரு புதிய வசதி இருக்கிறது. இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளைப் பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, கணினி சரி செய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.



இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதிந்து வைக்கிறது. அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது.இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்தீர்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.


இதனை திறப்பதற்கு START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள். அதில் PSR என தட்டச்சு செய்யுங்கள் அல்லது START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டச்சு செய்யுங்கள். இதனைப் பயன்படுத்த முதலில் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வரும் windowவில் START RECORD என்ற பொத்தானை அழுத்துங்கள். பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனைத் திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.


நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும் போதும் இந்த மென்பொருள் screen SNAP SHOT எடுத்து வைக்கும். முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். பின்னர் அது கோப்பை எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும். அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிக்கொள்ளுங்கள்.


இந்த மென்பொருள் உங்கள் screenகளை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும். அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப்பட்டிருக்கும்.



Thank you.....