Friday, 13 March 2015

உலகின் ஆபத்தான 25 Passwordகள்




இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன.  ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.


கடினமான password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data  நிறுவனத்தினர் மிக ஆபத்தான 25 passwordகளை வெளியிட்டு உள்ளனர்.





உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:


1.  password2.  1234563.  123456784.  qwerty5.  abc1236.  monkey7.  12345678.  letmein9.  trustno110.  ragon11.  baseball12.  11111113.  iloveyou14.  master15.  sunshine16.  ashley17.  bailey18.  passwOrd19.  shadow20.  12312321.  65432122.  superman23.  qazwsx24.  michael 25.  football




மேலே உள்ள இந்த 25 passwordகள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் passwordகளை நீங்கள் வைத்தால் Hackerகள் சுலபமாக உங்களின் passwordஐ அறிய முடியும். உங்களின் password எப்படி இருக்க கூடாது என இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? நீங்கள் மேலே உள்ள passwordகாளை உபயோகித்தால் உடனே மாற்றி விடுங்கள்.




Thank you 

No comments:

Post a Comment