Monday, 9 March 2015

வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் !



\




கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் 

   (Computer Tips & Tricks)

வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்

: புது யுகம் !

          அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள் , தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்களை எழுதும்படியும் அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து நாம் இங்கே பிரசுரித்துள்ளோம் !


எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,



முள்ளிவாய்க்கால் பேரவலம் நடபெற்று இரண்டு                 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது, ஆனால் இன்னமும் எம் உறவுகள் நிம்மதியாக வாழமுடியவில்லை உண்மையைச் சொன்னால், எமக்கென்று ஒரு தேசம் பிறக்கும் வரை ஈழத்தமிழனால் நிம்மதியாக வாழ முடியாது. வயது வேறுபாடின்றி எம் தமிழனை சகட்டுமேனிக்கு படுகொலை செய்து எம்மவர் இரத்தம் குடித்த சிங்கள தேசத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவும், அத்தேசத்திற்கான சர்வதேச பொருளாதார, நிதி மற்றும் பிற ஆலோசனை போன்ற உதவிகளை தடுக்கவும், புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம், எம்மாலான அனைத்து வழிகளிலும் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.


இதில் ஒன்று தான் மிகவும் சுலபமான பிரச்சாரம்:



பொதுவாக நம்மில் பலர் இணைய வசதியை பெற்றுள்ளோம், அதிலும் ''வயர்லெஸ் றூட்டர்''(Wireless router) இணைப்பு தான் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது, அப்படி இணைய வசதி உங்களிடம் இருந்தால், உங்களது வயர்லெஸ் நெற்வேர்க் நேம் [Wireless network Name (SSID)] என்பதற்கு நேராக இலங்கையின் போர்குற்ற நாள்18052011 என எழுதி அப்டேட்(Update) செய்யவும், இப்படி நாம் செய்தால் எம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள் தங்களது வயர்லெஸ்(Wireless) இணைப்பினை ஏற்படுத்த முனையும் பொழுது உங்களது நெட்வேர்க்(Network Name) பெயரும் அவர்களது கணினியில் தோன்றும், அப்போது அவர்களுக்கும் இலங்கையை பற்றிய செய்தி தானாகவே சென்றடையும் இப்படி அடிக்கடி வேறு வசனங்களை எழுதி உங்களது நெட்வேர்க் பெயரை ( Network Name)மாற்றினால் எம் சுற்றாடலில் உள்ள வேற்றின மக்களுக்கு 'இலங்கையில் இனப்பிரச்சினை' உண்டு என்பது தெரியப்படுத்தப்படும்.



இந்த மாற்றங்களை எப்படி செய்வது:



பிரிதானியாவில் TALK TALK இணைய வசதி உள்ளவர்கள் பின்வருமாறு செய்யலாம்,

உங்கள் அட்ரெஸ் பாரில்(Address bar) 192.168.1.1 என டைப்(Type) செய்து உள்நுழையவும்(Enter) அடுத்து வரும் பெட்டிகளுக்குள் அட்மின்(Username& password - admin) என டைப் (Type) செய்து உள்நுழையவும் பின்பு இடது பக்கதில் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிரும்(Options) அதில் மேலேயுள்ள குயிக் ஸ்ரார்ட்(Quick start) என்பதை அழுத்தவும், அதன் பிறகு வரும் பெட்டிக்குள் உள்ள வயர்லெஸ் நெர்வேர்க் நேம் ([Wireless network Name (SSID)]) என்பதற்கு எதிராக நீங்கள் விரும்பியதை எழுதி, அதற்கு மேலே எனேபிள் வயர்லெஸ்(Enable Wireless) என்பதை அழுத்தி சரி அடையாளமிட்டு பின்னர் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Connect என்பதை அழுத்தி பின்னர் OK என்பதை அழுத்தவும், இப்போது உங்கள் வயர்லெஸ்(Wireless) இணைப்பு பூரணமாகிவிடும்.



இதை போல வேறு இணைய சேவையை பயன்படுத்துபவர்கள் உங்களது இணைய சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களது வயர்லெஸ்(Wireless) பெயரை மாற்றி கொள்ளலாம்.


நன்றி அதிர்வு

               
         அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்
alt
            

               தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




        இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.


ஆபாசம் தொடர்பான விடயங்கள் (google.com)கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி?

                   


            இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது. 
                 இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
…           முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
             Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
               Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
              அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
               நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்…
              Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…








உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
 கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும் 
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம் 
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் 
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் 
alt
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் 


3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும் 





உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்


            இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.

             கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.



            பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.

இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.


இணைய தள முகவரி - http://convertico.org/




பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க 

                            சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

                        பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

                                   கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது




01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.





II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 



                        சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.

01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்

02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  

03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.

04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.

05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.







II  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IPI  ADDRESS  அறிய 




01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracerthttp://applelive9578.blogspot.in/
[அல்லது] 



01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)





IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 




01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   

02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண

map : <city name>

உதாரணம் : map :pudukkottai,avanam kaikatti


03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>
உதாரணம் : time:china 
04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய

weather :<city name>pudukkottai

உதாரணம் : weather : mumbai 

05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605







 வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



                    நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.

எ . கா : அன்னையும் பிதாவும் 

இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க

Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

எ . கா : அன்னையும்  பிதாவும் 





       !!  ~ பயனுள்ளதாக  இருக்குமென நினைக்கிறேன் ~ !!

                                                             

















                                         நன்றி ...............நன்றி...............நன்றி

No comments:

Post a Comment